சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சர்ஜிகல் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சர்ஜிகல் பிளாக்கில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைத்திருக்கும் அறையில் நடந்துள்ளது. இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால், நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நல்வாய்ப்பாக, தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனடியாக விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றானர்.
அண்மைச் செய்தி: தேர் விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம்
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மின்கசிவு காரணமாகா தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தீ விபத்து நடந்த இடத்தில் 3 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.