ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மகேந்திராசிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படக்கூடிய ஐபோன் 14 மற்றும் 15…

செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

மகேந்திராசிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படக்கூடிய ஐபோன் 14 மற்றும் 15 ஆகிய செல்போன்களின் உதிரி பாகங்கள் இங்கு ஒன்றிணைக்கப்பட்டு செல்போனாக புதுப்பிக்கப்படுகிறது.

நேற்றிரவு இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

விடுமுறை தினம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.