அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று கூடும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.