மானாமதுரை வீர அழகரை வரவேற்கும் கொண்டாடத்தின் போது பட்டாசு வெடித்து சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள புகழ்பெற்ற மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும் . திருவிழாவின் ஒரு அங்கமாக மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று, மானாமதுரையில் வீர அழகரின் வீதி உலா நடைபெறுவது வழக்கம்
இந்நிலையில் மே 9ம் தேதி மானாமதுரை பாகபத் அக்ரஹாரம் பகுதியில் வீர அழகரை வரவேற்கும் வீதி உலா நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்து சிதறியதில், ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் தீ பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.
இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்







