செக் மோசடி: தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு

செக் மோசடி பிரச்சனை தொடர்பாக கிரிக்கெட் வீரர் தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே. எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம்…

செக் மோசடி பிரச்சனை தொடர்பாக கிரிக்கெட் வீரர் தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே. எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் பீகார், பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளது. நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனம் உரம் வாங்கியுள்ளது. ஆனால், உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காததல் எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம், ரூ. 30 லட்சத்துக்கான செக்கை எஸ்.கே. நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாததால் செக் ரிட்டர்ன் ஆகியுள்ளது.

இதையடுத்து, எஸ்.கே. நிறுவனம் சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், நியூ குளோபல் ப்ரொட்யூஸ் நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, எஸ்கே எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியூ குளோபல் இந்தியா நிறுவனத்தின் உர விளம்பரத்தில் தோனி நடித்திருந்தார். இந்நிலையில், அந்த உரத்தை தோனி விளம்பரப்படுத்தியதால், அவர் உள்பட 8 பேரின் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஜூன் 28ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.