2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அந்த உரையின்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
குறள் : இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
அதன் பொருள் : நாட்டுக்குப் பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தலும், உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், காப்பாற்றியுள்ள பொருள்களைப் பயன்படும் வழிகளில் வகுத்துச் செலவிடுதலும் ஆகிய இவற்றுள் வல்லவனே அரசு செய்வதற்குரியவன்.
அதேபோல்,
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
என்ற குறளையும் மேற்கொள்காட்டி பேசினார்.
அதன்பொருள் : நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.







