‘ #LIK ‘ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான புதிய தகவல்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ‘தீமா’ என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய…

film team, firstsingle, Theema, Love Insurance Company,

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ‘தீமா’ என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : TNFactCheck | சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ‘தீமா’ என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.