தேவரா திரைப்படம் வெளியான 2ம் நாளில் உலகளவில் ரூ.243 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘தேவரா’ வெளியாகியுள்ளது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : குற்றவாளிகளுக்கு உறுதுணை? – #Whatsapp இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! நடந்தது என்ன?
இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. தேவரா திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகலளவில் ரூ.172 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் 2ம் நாள் முடிவில் இந்த திரைப்படம் 243 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் இப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







