தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகலில் 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக, தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணி, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்.9-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று திமுக, அதிமுக மற்றும் தவெக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து கடைசி நாளான இன்று இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேடுபுமனுத்தாக்கல் நிறைவடைந்தது. நாளை வேட்புமனு மீதான பரீசிலனை நடைபெற உள்ளது. செப்.18-ம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.




