இருக்கை தொடர்பாக சண்டை – விமானத்தில் #CISF காவலரை கடித்த பெண் பயணி!

புனேவில் இருந்து  டெல்லி சென்ற விமானத்தில் இருக்கையில் அமர்வது தொடர்பான சண்டையில் சிஐஎஸ்எஃப் காவலர் மற்றும் 2 சக பயணிகளை பெண் ஒருவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று புனேவில்…

Fight over seat - Female passenger bites #CISF constable on flight!

புனேவில் இருந்து  டெல்லி சென்ற விமானத்தில் இருக்கையில் அமர்வது தொடர்பான சண்டையில் சிஐஎஸ்எஃப் காவலர் மற்றும் 2 சக பயணிகளை பெண் ஒருவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று புனேவில் இருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் டெல்லியில் உள்ள தனது உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கான சுரேகா சிங் என்கிற பெண் பயணித்தார். சுரேகா சிங்கின் கணவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சுரேகா விமானத்தில் ஏறியது முதல் சக பயணிகளான அன்விதிகா மற்றும் ஆதித்யா போர்ஸுடன் விமான இருக்கை தொடர்பாக கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்கு வாதம் முற்றிப் போகவே அவர் அங்கிருந்த சிஐஎஸ்எஃப் காவலரை அழைத்து அவரிடம் புகார் அளித்தார்.

சுரேகா முதலில் சக பயணிகளை தாக்கியாதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் காவலர்களான பிரியங்கா ரெட்டி மற்றும் சோனிகா பால் ஆகியோர் விசாரணை நடத்தி அவரை கண்டித்துள்னர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுரேகா அவர்களை தாக்கி அவர்களது கையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.

நிலைமை மோசமடைந்ததால், காவலர்கள் சுரேகா  சிங்கைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரது கணவரையும் சேர்த்து விமானத்திலிருந்து வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து விமான நிலைய போலீசாரிடம்  அப்பெண் ஒப்படைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.