FIFA2026: ஃப்ரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்!

உலககோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நள்ளிரவில் (இந்திய நேரப்படி) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஃப்ரான்ஸ் – ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் விளையாடின.

இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தன. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயண்படுத்தி ஸ்பெயின் வீரர் ஓயர்சபல் கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் ஃப்ரான்ஸ் அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது. ஆனால் ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸ் பலமாக இருந்ததால் ஃப்ரான்ஸ் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனிடையே ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதி 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரொ பேரோ அணியின் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து ஃப்ரான்ஸ் அணி கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தது. ஆனால் பலமான ஸ்பெயினின் டிஃபன்ஸ் அதனை தடுத்தது. இதனால் ஃப்ரான்ஸ் அணி இறுதிவரை கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் அரையிறுதில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஃப்ரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நள்ளிரவு நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அர்ஜண்டினா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.