முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான நிலையங்களில் பயணிகள் கூட்டத் அதிகரித்துள்ளதையடுத்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி திருநாள் விடுமுறையை சனி, ஞாயிறு வார விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக புறப்பட்டு செல்கின்றனா். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டு உள்ளன. ஆனாலும்
பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்து
உள்ளதால் இறுதி நேரத்தில் பயணிகள் சொந்த வாகனங்களில் செல்கின்றனர்.
விமானங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்து
உள்ளன. சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால் சென்னை விமான
நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. சென்னை விமான நிலையத்தில்
வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பயணிகள்
பயணித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது 50 ஆயிரத்தையும் கடந்து
இருக்கிறது.


சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தையொட்டி விமானங்களின் பயண கட்டணமும், பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி திருநாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள் பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.

சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ 6,500, தற்போது ரூ.14,000 -ரூ15,000
வரை அதிகரித்து உள்ளது. சென்னை-கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ. 7,500.
தற்போது ரூ.20,000-ரூ.22,000 வரை உள்ளது. சென்னை- புவனேஸ்வர் வழக்கமான
கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.15,000- ரூ.16,000 வரை உயர்ந்து உள்ளது.

சென்னை-பெங்களூர் வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.4,500- ரூ.6000 என
உயர்ந்து விட்டது. சென்னை- கொச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையான வழக்கமான
கட்டணம் ரூ. 4,000. தற்போது ரூ.14,000 வரை இருக்கிறது.


அதுபோல் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை-மதுரை இடையே
வழக்கமான ரூ.4,200 கட்டணம் ரூ.15 ஆயிரம் வரை உள்ளது. சென்னை-திருச்சி வழக்கமாக ரூ. 4,500. ஆனால் தற்போது ரூ.7,500 -ரூ.10,000 என உள்ளது. சென்னை- தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500 கட்டணம் ரூ.9,500 – ரூ.11,500 என உள்ளது. சென்னை- கோவை வழக்கமான ரூ. 3,500 கட்டணம் ரூ.7,500- ரூ.11,500 வரை உள்ளது.

இதைப்போல் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளி திருவிழாவை கொண்டாடும் ஆா்வத்தில் கட்டணம் பற்றி யோசிக்காமல் ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர்.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதைப்போல் முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால் குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விடுவதால் அதிக கட்டணம் டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் தான் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே ஆண்டில் அரிசி 8%, கோதுமை 19% விலை அதிகரிப்பு

G SaravanaKumar

பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

Gayathri Venkatesan

பிரதமரை வரவேற்க ஒன்றுகூடும் திமுக, அதிமுக, பாஜக

EZHILARASAN D