முக்கியச் செய்திகள் தமிழகம்

சர்ச்சை பேச்சு: கைதான பாதிரியாருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் அனுமதி

இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். பின்னர் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர்

நாகர்கோயில், அருமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது

EZHILARASAN D

பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

G SaravanaKumar

மதுரையில் செப்.2 முதல் 12ம் தேதி வரை புத்தக கண்காட்சி- மாவட்ட ஆட்சியர்

G SaravanaKumar