ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ஆதிசங்கரருடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ந்தேதி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி தற்போது ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை வந்தடைந்துள்ளார். இந்த யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தியுடன் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ஒற்றுமை நடை பயணம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை வந்தடைந்ததையடுத்து அம்மாநிலத்தின் லகான்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலை வசதிகள் இல்லாத காலத்தில் காடுகளை கடந்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணமாக ஆதிசங்கரர் யாத்திரை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். அவருக்கு பின்னர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டவர் ராகுல்காந்திதான் எனவும் பரூக் அப்துல்லா கூறினார்.
ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாத யாத்திரை இந்தியாவின் ஒற்றுமைக்கானது எனக்கூறிய பரூக் அப்துல்லா, இந்த யாத்திரைக்கு எதிரானவர்கள், இந்தியாவிற்கும், மனிதநேயத்திற்கும், மக்களுக்கும் எதிரானவர்கள் என்று விமர்சித்தார்.