தென்பெண்ணை ஆற்றில் அதிகரித்த ரசாயன நுரை! விவசாயிகள் கவலை!

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு அதிக அளவு ராசாயனம் கலந்து நுரை வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து இன்று விநாடிக்கு 356 கன அடி…

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு அதிக அளவு ராசாயனம் கலந்து நுரை வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து இன்று விநாடிக்கு 356 கன அடி நீர் வருவதாகவும், 410 கனஅடி நீரானது 2 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் தற்போது 41.49 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநில தென்பெண்ணை அற்றங்கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை துர்நாற்றத்துடனும், வெள்ளை நிறத்திலும் பணிபோர்த்தியது போல காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.