1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !

சிவகங்கையில் கடந்த 18 வருடங்களாக விவசாயி ஒருவர் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார் . சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் விவசாயம் செய்வதுடன் விவசாய…

சிவகங்கையில் கடந்த 18 வருடங்களாக விவசாயி ஒருவர் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார் .

சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் விவசாயம் செய்வதுடன் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மோட்டர்கள் பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் .

இந்த நிலையில் இவர் கிராமத்தில் உள்ள தேவர் கண்மாய் கரை பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக வெயில் ,மழை என்று பாராமல் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார். மேலும் தினந்தோறும் காலை ஐந்து மணிக்கு கண்மாய் கரைக்கு வரும் முனியாண்டி ஆலமரத்தின் அருகே விளக்கேற்றி தியானம் செய்து விட்டு கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் பத்து கிளிகள் மட்டுமே வந்து சென்ற நிலையில் தற்போது ஆயிரம் கிளிகளுக்கு மேல் வந்து செல்கின்றது .

இதற்காக மாதம் தோறும் 300 கிலோ அரிசியை உணவாக வழங்கி வருகிறார் . இந்த பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அதிக அளவில் பனை மரங்கள் இருந்ததாகவும் அதில் ஆயிரக்கணக்கான கிளிகள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது . தற்போது அந்த பகுதி வீடு மனைகளாக மாறியதால் முனியாண்டி ஆலமரத்தின் அருகே கிளிகளுக்கு உணவு வழக்கு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் . இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.