ஆன்லைன் ரம்மி குறித்த விளம்பரப் படங்களில் நடிக்காமல் நடிகர்களாக பார்த்து திருந்த வேண்டும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் போதை பொருள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மகளிர் சுய உதவி
குழுக்கள் ஆகியோர் பங்கேற்றனர் பேரணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி
வைத்தார். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்மன்றத்தை அடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரம்மி விளம்பரங்களில் நடிக்காமல் சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும். ஆன்லைன் ரம்மியை மக்களின் கருத்து கேட்ட பிறகு நிரந்தரமாக ஒழிப்பதற்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தான் மக்களுடைய கருத்து கேட்கப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து
உள்ளதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை அவர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்.
போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வெளிப்பகுதிகளில் இருந்தோ கொண்டு வருவதை நிச்சயமாக தடுத்து நிறுத்தி போதை இல்லாத தமிழகமாக மாற்ற ப்படும். பொதுமக்களில் கருத்துக்கள் கேட்ட பிறகு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்றப்படும். நிச்சயமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யும் என்றார் அமைச்சர் ரகுபதி.