சைவ உணவால் பிரபலமான பெண் பட்டினியால் பலி… ‘வீகன் ரா ஃபுட் டயட்’ உண்மையில் பலன் தருமா?

’வீகன் ரா ஃபுட் டயட்’ மூலம்  பிரபலமான பெண் பட்டினியால் இறந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உணவு என்பது ஒவ்வொரு நபரின் அடிப்படைத் தேவை, அதன் குறைபாடு மரணத்திற்கு வழி வகுக்கும்.…

’வீகன் ரா ஃபுட் டயட்’ மூலம்  பிரபலமான பெண் பட்டினியால் இறந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உணவு என்பது ஒவ்வொரு நபரின் அடிப்படைத் தேவை, அதன் குறைபாடு மரணத்திற்கு வழி வகுக்கும். சமீபத்தில் ஒரு புதிய வழக்கில் 39 வயதான சைவ உணவால் பிரபலமான ஜன்னா சாம்சோனோவா பல ஆண்டுகளாக முற்றிலும் பச்சையான சைவ உணவை உட்கொண்டு பட்டினியால் இறந்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பதிவுகளின்படி, சாம்சோனோவா கட்ந்த10 ஆண்டுகளாக முற்றிலும் சைவ உணவைப் பின்பற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில், ஜன்னா ஏற்கனவே சோர்வாக காணப்பட்டுள்ளார். பின்னர் நண்பர் ஒருவர் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இருப்பினும், மீண்டும் சாம்சோனோவா ‘பச்சை உணவு’ மட்டுமே எடுத்துக் கொண்டார்.

https://www.instagram.com/p/CT9k-ArqKP_/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

சாம்சோனோவாவின் தாய், தனது மகள் காலரா போன்ற தொற்றுநோயால் இறந்ததாகக் கூறினார். இருப்பினும், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியிடப்படவில்லை. தனது உணவு முறை குறித்து சாம்சோனோவா கூறுகையில், எனது உடலும் மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். எனது புதிய தோற்றத்தை நான் விரும்புகிறேன், நான் பழைய பழக்கத்திற்கு திரும்ப மாட்டேன்.’ என தனது பதிவுகளில் அவ்வப்போது கூறிவந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.