திமுக நடத்தியது பொற்கால ஆட்சி அல்ல கற்கால ஆட்சி, என பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
சென்னை பிராட்வே டான்போஸ்கொ பள்ளியில், பாஜக சார்பில் துறைமுகத்தில் தாமரையின் சங்கமம், எனும் தேர்தல் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், மக்கள் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கும் திமுக தலைவர், தங்கள் குடும்பத்தினரின் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்களா, எனவும் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நல்ல திட்டங்கள் குறித்து பேச திமுகவினருக்கு தைரியம் கிடையாது என தெரிவித்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இதுவரை தலைவர் இல்லை எனவும், தலைவராக இருந்தவர் அவ்வப்போது நாட்டை விட்டு போய் விடுவதாகவும் குற்றம்சாட்டினார். வரும் சட்டப்பேரவை தேர்தலில், யார் வரப்போகிறார் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம், என குறிப்பிட்டு பேசிய குஷ்பு, குடும்ப அரசியல் நடத்தும் கூட்டணி வெற்றி பெற கூடாது, எனவும் குஷ்பு குறிப்பிட்டார். இறுதியாக அவர் திமுக நடத்தியது பொற்கால ஆட்சியல்ல, கற்கால ஆட்சி என்று தெரிவித்தார்.