50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பட்டியலை இறுதி செய்யும் போது ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.







