32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

வாக்களிக்க இனி சொந்த ஊருக்கு செல்லத் தேவையில்லை: வருகிறது புதிய முறை!

ரிமோட் வாக்கு செலுத்தும் முறை குறித்து விரைவில் சோதனை நடக்கவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த இதுதொடர்பான நிகழ்வில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் வாக்களிப்பது பற்றி ஆய்வு நடந்து வருவதாக குறிப்பிட்டார். “இந்த நடைமுறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் இதுதொடர்பான சோதனை நடக்கும்” என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் வாக்காளர் தேர்தலன்று தனது சொந்த ஊரிலுள்ள வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. தான் இருக்கும் அல்லது பணிபுரியும் இடத்தில் இருந்தே சொந்த தொகுதியில் வாக்கு செலுத்தும் வசதியை அது உருவாக்கும். இதற்காக சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது.

இதுபற்றி விளக்கிய முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் சந்தீப் சக்சேனா, “உதாரணமாக மக்களவைத் தேர்தலில் சென்னை வாக்காளர் ஒருவர் டெல்லியில் வசிக்கிறார் எனில், அவர் வாக்களிப்பதை தவிர்க்கவோ அல்லது வாக்களிப்பதற்காக சொந்த தொகுதிக்கு திரும்பவோ தேவையில்லை. அதற்கு பதிலாக தேர்தல் ஆணையம் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சொந்த தொகுதிக்கான வாக்கை செலுத்தலாம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

Web Editor

கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Jayasheeba

இந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!

Halley Karthik

Leave a Reply