விசிக நிர்வாகிகள் பெயரில் போலி மின்னஞ்சல்; காவல் நிலையத்தில் புகார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் பெயரில் போலியான மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அவதூறான செய்திகளை சிலர் பரப்பி வருவதாக கூறி அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் பெயரில் போலியான மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அவதூறான செய்திகளை சிலர் பரப்பி வருவதாக கூறி அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் பெயரில் போலியான மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கப்பட்டு சிலர் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயரிலும் என் பெயரிலும் ஒரு மின்னஞ்சல் முகவரி உருவாக்கி, இஸ்லாமியர்களை பற்றிய அவதூறான செய்திகளை, அரசியல் சாராதா இஸ்லாமியர்கள்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறார்கள்.

அவதூறு பிரச்சாரத்தை இப்படி செய்வதன் மூலம் நான் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லினத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த வேலையை சிலர் திட்டமிட்டு செய்து வருகிறார்கள் எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் யார் என்பதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் புகாரளித்ததாக தெரிவித்தார்.

மேலும், அவர்கள் அனுப்பும் செய்திகள் தெளிவான ஆங்கிலத்திலும், நாங்கள் செய்தி அனுப்புவதை போலவே உள்ளது, இதனால் பொதுவான இஸ்லாமியர்கள் இதை நம்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு உள்ள நெருக்கத்தை குறைப்பதற்கான தேவை வேறு யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் உள்ள நெருக்கத்தினை குறைக்க பாஜகவினர் முயல்வதாக குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.