ஆண் நண்பர் இல்லாவிட்டால் கல்லூரிக்குள் அனுமதியில்லை; சர்ச்சையை கிளப்பிய நோட்டீஸ்

ஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரியின் பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியான நோட்டீஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆக்ராவில் பிரபல செயின்ட் ஜான்’ஸ் கல்லூரி உள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த கல்லூரி பேராசியர் ஆசிஷ் ஷர்மா…

ஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரியின் பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியான நோட்டீஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆக்ராவில் பிரபல செயின்ட் ஜான்’ஸ் கல்லூரி உள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த கல்லூரி பேராசியர் ஆசிஷ் ஷர்மா கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனவரி 14 என குறிப்பிடப்பட்ட அந்த நோட்டீஸில், வருகின்ற பிப்ரவரி 14 ம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்றும், இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிங்கிளாக இருக்கும் மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ந்த மாணவிகள் உடனடியாக தங்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் இந்த நோட்டீஸ் குறித்த தகவலை கல்லூரி முதல்வர் எஸ்.பி.சிங்கின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். இதனிடையே, சிலர் கல்லூரியின் பெயரை குலைக்க சதிவேலையில் தவறான செய்தியை பரப்பியிருக்கின்றனர். எனவே மாணவிகள் அந்த நோட்டீஸை புறக்கணிக்குமாறு கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆசிஷ் சர்மா என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணிபுரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply