சென்னை காமராஜர் சாலையில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ”நம்ம சென்னை” செல்ஃபி ஸ்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையின் பெருமைகளை கொண்டாடும் வகையிலும், பொதுமக்கள் தாங்களே புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்னை மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், காமராஜர் சாலையில் நம்ம சென்னை அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரத் திட்ட நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த செல்ஃபி ஸ்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இ-மிதிவண்டிகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 500 இ-மிதிவண்டிகள் மற்றும் 500 அடுத்த தலைமுறை மிதிவண்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளன.







