6 வாரத்துக்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில்…

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையங்களும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையைப் பின்பற்றவில்லை என வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மெட்ரோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு வார காலத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனவும், புதிதாக கட்டப்படும் மெட்ரோ நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.