மியான்மரில் பேஸ்புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கெதிராக ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக மியான்மர் ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு, தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை மியான்மர் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், அதிகாலையில் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம், ‘பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுகிறது. இதனால், நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.