முக்கியச் செய்திகள் தமிழகம்

பேஸ்புக் சேவையில் மாற்றங்கள்

பேஸ்புக் செயலியில் வரும் 31ம் தேதிக்கு பிறகு சில சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய செயலியாக விளங்குவது பேஸ்புக். இது பேஸ்புக் பயனாளர்களின் இருப்பிட தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியை செய்திருந்தது. இதில் அருகில் உள்ள நண்பர்களை தெரிந்து கொள்ளும் வசதி, வானிலை நிலவரங்கள், இருப்பிட தகவல்கள் (background history), இருப்பிடங்கள் குறித்த வரலாறுகள் (location history) போன்ற வசதிகள் அடங்கும்.

இதில் அருகில் உள்ள நண்பர்களை அறிந்து கொள்ளும் வசதி, பயனாளர் இருக்கும் இடங்களின் பின்னணி தகவல்கள் மற்றும் வானிலை நிலவரங்கள் குறித்த தகவல்கள் வரும் மே 31ம் தேதிக்கு பின்னர் பயன்படுத்த முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயனாளர்கள் தங்கள் இருப்பிட வரலாறு (location history) மற்றும் இருப்பிடம் குறித்த தகவல்கள் அனைத்தையும் மே 31ம் தேதிக்குள் update செய்து கொள்ளலாம். அதற்கு பிறகு இந்த தகவல்கள் எதுவும் பேஸ்புக்கில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் பேஸ்புக் பயனாளர்கள், தங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை பார்க்கவோ அல்லது அதனை அழிக்கவோ வேண்டுமானல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை செய்து கொள்ள முடியும் எனவும், அதற்கு அதுகுறித்த தகவல்கள் அனைத்தும் தானாக முழுவதும் அழிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி; கமல்ஹாசன்

Saravana Kumar

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு காவல் அதிகாரி டெரிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை!

Vandhana

இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதிப்பு 5ஆக அதிகரிப்பு

Halley Karthik