“மருத்துவர்களின் பணி நேர நீட்டிப்பை திரும்பப் பெற வேண்டும்”

மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி முகாம்களை மருத்துவர்கள் புறக்கணிபார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு…

மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை அரசு
உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி முகாம்களை மருத்துவர்கள்
புறக்கணிபார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ( FOGDA) சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம்
பேசியதாவது:

தமிழக அரசு 27/7/2022 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் . 225 படி
மருத்துவர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை இருந்ததை நீட்டித்து
காலை 8 மணி முதல் 4 வரை பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவர்கள் மிகுந்த பணி சுமையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இவ்வாறு பணி நேரத்தை அரசு நீட்டித்துள்ளது மேலும் எங்களின்
பணிச்சுமையை அதிகரிக்கும். அதோடு அரசு சார்பில் மருத்துவர் சங்க பிரதிநிதிகள்
யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளனர்.

தற்பொழுது பணி நேரத்தை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை மருத்துவர்கள் புறக்கணிப்பார்கள். அப்பொழுதும் தமிழக அரசு எங்களின்
கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் இந்த மாதம் 20ஆம் தேதி காலை 10
மணிக்கு டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று
கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.