இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 13 ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதைப்போல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டு சேற்கைக்கான நீட் தேர்வு தமிழ் ஆங்கிலம் இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ம் தேதியுடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக 13 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள வாயிலாக வருகிற 13 ம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
Good news for neet aspirants.Thanku so much @DG_NTA 🙏🙏🙏 pic.twitter.com/Z7dySUyn4u
— NTA NEET UPDATES (@nta_updates) April 10, 2023
- பி.ஜேம்ஸ் லிசா









