லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான கடுமையான போட்டிக்குப் பிறகு, விராட் கோலி இன்று காலை நீச்சல் குளத்தில் அவரது மகள் வாமிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று இரவு பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61 ரன்களும், கேப்டன் டூ பிளஸ்சிஸ் 79 ரன்களும், மேக்ஸ்வெல் 59 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 65 ரன்களும், நிகோலஸ் பூரன் 62 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
https://twitter.com/imVkohli/status/1645711251379736577?s=20
இதனால், பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த RCB ரசிகர்கள், இணைய்த்தில் தங்கள் வருத்ததை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், விராட் கோலி இன்று காலை நீச்சல் குளத்தில் அவரது மகள் வாமிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
தந்தை-மகள் இருவரும் நீச்சல் குளத்தை ரசிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் நடைபெற்று வரும் இந்த நேரத்திலும், விராட் கோலி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.








