கொரோனா பரவல் அதிகரிப்பு; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா மீண்டும் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.