அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவாட்டியாவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் பங்கேற்கிறது. இந்த டி20 தொடர் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
வீரர்கள் பட்டியல்
இந்த தொடரில் இடம் பெறும் வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
https://twitter.com/BCCI/status/1537085126496034817
ராகுல் திவாட்டியா
ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் ஆல் ரவுண்டராக வலம் வந்த ராகுல் திவாட்டியாவிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபில் தொடரில் ராகுல் திவாட்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். கடுமையான சூழ்நிலையிலும் தனது அபார முயற்சியின் மூலம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
ஒரு போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில், தான் சந்தித்த இரு பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அணியை வெற்றி பெறச்செய்தார். 16 போட்டிகளில் 217 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 147.62 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.
வைரலான ட்வீட்
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மன வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அதில், “எதிர்பார்ப்புகள் வலிக்கிறது” என்று அவர் பதிவிட்டிருந்த டுவீட்டானது தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/rahultewatia02/status/1537153958153576448
ஐபிஎல் 2020 க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கு திவாட்டியாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் உடற்தகுதி தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.







