கேஜிஎப் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப். திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இருப்பினும், அவ்வப்போது படத்தின் அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப்-2 திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https://twitter.com/TheNameIsYash/status/1429381892646707200
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட நடிகர் யாஷ், தவிர்க்க முடியாத காரணங்களால் கேஜிஎப் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். அதே போன்று, கேஜிஎப்-2 திரைப்படம் திரையரங்குகளிலேயே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.









