அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் கள், அச்சமின்றி எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 76 மேல் நிலை பள்ளிகளும் ,10 அரசு உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன. இந்த நிலையில் +2 பொது தேர்வு வரும் 13 முதல் துவங்க உள்ளது.
இதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்களில் 18,264 பிளஸ் 1 மாணவர்களும், 20,568 பிளஸ் டூ மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தனி தேர்வர்கள், 4 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
தற்பொழுது தேர்வு பணிகளில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், 500 க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ம. ஸ்ரீ மரகதம்








