ஈரோடு மாவட்டம். அந்தியூர் அருகே பெண் காட்டு யானை இரண்டு குட்டிகளுடன்
சாலையில் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு
வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வறட்டுபள்ளம் வனசோதனை சாவடி அருகே உள்ள , அந்தியூர் – பர்கூர் பிரதான சாலையில், பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன்
சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், காட்டு யானைகள் சாலையில் சுற்றித்திரிந்ததன் காரணமாக, வன சோதனைச் சாவடியிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து , யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு
வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன.
மேலும், இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், கடந்த இரண்டு தினங்களாக ஒரு பெண் யானை இரண்டு குட்டிகளுடன், அவ்வப்போது பிரதான சாலைக்கு வந்து சுற்றி திரிகிறது. இதேபோல், ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்களுக்கு மேல் , சாலையிலேயே சுற்றித் திரிந்தும் அங்குள்ள மூங்கில்களை சாப்பிட்டும் வருகிறது. இதன் காரணமாக , சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு , வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், மேலும் , சாலையில் யானை இருக்கும்போது , அதனை தொந்தரவும் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன