முக்கியச் செய்திகள் உலகம்

3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

இஸ்ரேலில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎன்என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரு நபரின் மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் திசுக்கள் சேதமடையாமல் உடைத்தெடுக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிமு 1550 மதுல் கிமு 1450 ஆம் ஆண்டு காலத்துக்குள்  இந்த சகோதரர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. டெல் மெகிடோவில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த சகோதரர் வயது 20 முதல் 40க்குள் இருக்கலாம். அவரது மண்டை ஓட்டில் மூளை அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதாவது மண்டை ஓட்டில் ஒரு சதுரமான எலும்புப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதன் வாழ்க்கை முறை மட்டுமே கண்டுபிடிக்க இயலும், ஆனால் இந்த மனித எலும்பு மூலம் அரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்? – அமித்ஷாவை சந்திக்க திட்டம்

G SaravanaKumar

தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் மின்சார விநியோகம் – அமைச்சர் செந்தில்பாலாஜி

Web Editor

மணிகண்டனின் சுவாரஸ்யமான 7 பதில்கள்..!

Niruban Chakkaaravarthi