திமுக சார்பில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் – இன்று முதல் தொடக்கம்!

திமுகவின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ – பொதுக்கூட்டங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளன. தமிழ்நாடு அரசின் சாதனைகளையும்,  தமிழ்நாடு அரசின் 2024–2025–ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், மத்திய…

திமுகவின் ‘எல்லோருக்கும் எல்லாம்’ – பொதுக்கூட்டங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசின் சாதனைகளையும்,  தமிழ்நாடு அரசின் 2024–2025–ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், மத்திய அரசின் மூலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும்,  தமிழர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வரும் வேதனைகளையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் பிப்ரவரி 26–ஆம் தேதி முதல் பாகம் வாரியாக வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களை விநியோகித்துத் திண்ணைப் பிரச்சாரத்தை திமுகவினர்  ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

பிப்ரவரி 16,17,18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டங்கள்,  ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’  திண்ணைப் பிரசாரத்தைத் தொடர்ந்து ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சீரிய வகையில் கொண்டாடும் விதமாகத் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்தப்படுகின்றன.

மார்ச் 2,  3 மற்றும் 4 ஆகிய நாட்களில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் 161 இடங்களில் நடைபெறுகின்றன.  இப்பொதுக்கூட்டங்களில் திமுக முன்னணியினர் சிறப்புரையாற்றுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.