”தமிழ்நாட்டில் நரேந்திர மோடி அல்ல ராகுல் காந்தி போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்!” – திருப்பூரில் சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் நரேந்திர மோடி அல்ல ராகுல் காந்தி போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது.…

தமிழ்நாட்டில் நரேந்திர மோடி அல்ல ராகுல் காந்தி போட்டியிட்டாலும் அவரை
எதிர்த்துப் போட்டியிடுவேன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
பேட்டி.

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
இன்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒவ்வொரு
இடைத்தேர்தல் போதும் பொதுவான தேர்தல் நடத்தப்படுமா? ஓட்டுக்கு காசு கொடுப்பதை
நிறுத்தினால் தேர்தல் செலவு குறையும். தற்போது நிர்வாகிகளை சந்திப்பது என்பது
கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் சரிசெய்து கொள்வதற்கான பயணம்
தான் இது.

என் மீது சுமத்தபட்டதை குற்றச்சாட்டு என நம்பி இருந்தால் இத்தனை
லட்சம் பேர் வரமாட்டார்கள். அவதூறுக்கு அஞ்சுவதில்லை. 13 வருடமாக ஒரே
குற்றச்சாட்டு சொல்லி வருகிறார். அவசியம் அற்ற கேள்விகளை தவிருங்கள். யார்
மனு கொடுத்தாலும் அதனை காவல் துறை விசாரிப்பார்கள். இது போன்று 5க்கும்
மேற்ப்பட்ட ஆட்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு எல்லாம் பயப்படும் ஆள் இல்லை நான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. இது ஒரே நாடா? உணவு , பழக்க வழக்கம், கலாச்சாரம் மாறுபடும் போது எப்படி தேசத்தை ஒன்றாக்க முடியும். காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள், கச்சத்தீவை மீட்க முடியுமா?, அதை செய்யுங்கள் பிறகு ஒரே நாடு ஒரே
தேர்தல் பார்க்கலாம். காவிரி நீரை பொறுத்தவரை, பாஜகவும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே நிலைபாடு தான். திமுகவில் ஊழல் சொத்து பட்டியல் வெளியிட்டதை வரவேற்கிறேன்.

அதிமுக சொத்து பட்டியலையும் வெளியிடுங்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 சட்ட மன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கினீர்கள் ஒருத்தருக்கு 132 கோடி வீதம் சுமார் 5000 கோடிக்கு வாங்கினீர்கள். கர்நாடகாவில் பாஜக தோற்றுப் போக காரணமே அங்கு நடந்த பெரிய ஊழல் தான் எனவே கர்நாடகா ஊழல் குறித்தும் வெளியிடுங்கள், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் தானே காவல் துறையில் பணியாற்றினார் அங்கேயே பாஜக தலைவராக வேண்டியது தானே.

தமிழகத்தில் பாஜகவின் நரேந்திர மோடி இல்லாமல் ராகுல் காந்தி போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் , நூல் விலை, பெட்ரோல் விலை, சிலிண்டர் விலை
எல்லாமே தேர்தல் வருவதால் அதுவே குறையும், உயர்நீதி மன்றம் உண்மையை பேசி
உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல்
ஆணையம், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவைகள் தன்னாட்சி அமைப்புக்கள் என நாம் நம்பி வருகிறோம்.

அது நமது அறியாமை. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும். காமராஜர் கொண்டு வந்த திட்டம் மதிய உணவு திட்டம். 50 ஆண்டு மாறி மாறி ஆட்சி செய்து இப்போது தான் பிள்ளைகள் பட்டினி தெரிகிறதா? பள்ளி கட்டடம் சரியாக உள்ளதா, கல்வித்தரம் சரியாக உள்ளதா? அரசை நம்பாமல் வீட்டில் இருப்பவர்களும் உணவு கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அதனால் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறு சீமான் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.