பழனி முருகன் கோயிலுக்குள் கைப்பேசி எடுத்துச்செல்ல தடை – அனைத்து கோயிலிலும் அமல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அ க்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல்…

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அ க்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்பிரகாரத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியில்லை என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்கள் தங்கத்தேர், தங்கக் கோபுரம், கருவறை என அனைத்துப் பகுதிகளிலும் கைப்பேசியைக் கொண்டு படங்கள், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே பழனி கோயிலில் மூலவரை கைப்பேசியில் படமெடுத்தது தொடர்பாக பக்தர் ஒருவர் கோயிலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் பக்தர்கள் கைப்பேசி கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியது. மேலும், அதற்கு திருக்கோயில் நிா்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.இதையடுத்து பழனி திருக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் கைப்பேசியை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதியாக பாதுகாப்பு அறைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கோயில் மலையடிவாரத்தில் கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கைப்பேசிகளை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதே நடைமுறை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.