சிவகங்கையில் மனைவி உயிரிழந்த பிரிவை தாங்க முடியாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தெண்டாயுதபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் வீர சுவாமிநாதன், சுந்தராம்பாள் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 57 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குணசேகரன்,வீரக்குமார் என்ற இரு மகன்களும் சுகந்திரா என்ற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த வயதான தம்பதி தேவகோட்டையில் தனது பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுந்தராம்பாள் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால் கணவர் சுவாமிநாதன் மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில இன்று அதிகாலை சுவாமிநாதனும் உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் கணவன் மனைவி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







