முக்கியச் செய்திகள் சினிமா

110 ஆண்டுகளை கடந்தும் நாடகத்தனமாக திரைப்படங்கள் எடுக்கப்படுவது வேதனை -இயக்குநர் தங்கர்பச்சான்

110 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நாடகத்தனமாக திரைப்படங்கள் எடுக்கப்படுவது வேதனையளிப்பதாக இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் தனுஷ்கோடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மண்டபத்தில் நடைபெற்ற கருமேகங்கள் கலைகின்றன சினிமா சூட்டிங் இடைவேளையில் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்படத்தின் இயக்குனர் தங்கர் பச்சான்,  பொதுவாக இயக்குனர்கள் நினைக்கும் கதைகள் அப்படியே சினிமாவாக உருவாக்கும் சூழல் இல்லை. ஆனால் கரு மேகங்கள் கலைகின்றன திரைப்படம் செயற்கை தனமாக இருக்கக் கூடாது என நன்கு கவனித்து இயற்கையான வாழ்க்கை அப்படியே படமாக்கி வருகிறோம் என கூறினார்.

மேலும், சினிமாத்துறை 110 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நாடகத் தனத்தில்தான்
எடுக்கப்படுகிறது என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இந்நிலையை மாற்றி எதார்த்தமான
நிகழ்வை படமாக்கி வருகிறோம். இத்திரைப்படத்திற்கான கதை கடந்த 2006 ஆம் ஆண்டு
எழுதப்பட்டது. ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அமையாததால் உடனடியாக இந்தக் கதையை திரைப்படம் ஆக்க முடியவில்லை என கூறினார்.

அத்துடன், தற்போது சிறந்த தயாரிப்பாளர் மற்றும் இக்கதைக்கான கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் நடிகை கிடைத்து படபிடிப்பு துவக்கி உள்ளோம். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான இராமநாதன் என்ற கதாபாத்திரத்திற்கு இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார். மற்றும் உள்ள பாத்திரங்களில் இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதி மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என கூறினார்.

மேலும், நான் இதுவரை தமிழகத்தில் தென் மாவட்டங்களில் எடுக்கவில்லை. இந்தப் படம் தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமேஸ்வரம் பண்பாடு அடையாளம் மிகுந்த ஊர் எனவே ராமேஸ்வரம் மண்டபம் தனுஷ்கோடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்.மக்கள் அனைத்து விதமான கதைகள் கொண்ட சினிமாக்களை திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்க்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் தங்கர்பச்சான் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை,127 கோடி பணம் பறிமுதல்!

Jeba Arul Robinson

இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்-ரசிகர்கள் வாழ்த்து

G SaravanaKumar

அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்

Web Editor