ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றை அமைச்சர் முத்துச்சாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தில் தமிழக அரசு கூட்டுறத்துறை சார்பாக அமைக்கப்பட்ட புதிய அமுதம் நியாய விலைக் கடையை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் ஆய்வாளர் சந்தோசினி சந்திரா தலைமையில் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்துக் கொண்டு கடன் தள்ளுபடி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.






