மறைந்த இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மகன் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆவார்.
அண்மையில் எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் அரண்மனையை விட்டு வெளியேறி இருந்தார். 2010 ஆம் ஆண்டில் வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் அவர் அதிகாரப்பூர்வ பயணங்கள் குறித்த அறிக்கைகளை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக மவுண்ட்பேட்டன் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்த நிலையில் இன்று அவர் பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விண்ட்சரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக ஆண்ரூவின் பெயரை குறிப்பிடாமல் தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ “பொது அலுவலகத்தில் நடந்த ஒரு தவறான நடத்தை குற்றம் குறித்து தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நோர்போக்கைச் சேர்ந்த அறுபது வயதையொத்த ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார். தேசிய வழிகாட்டுதலின்படி, கைது செய்யப்பட்ட நபரின் நாங்கள் பெயரை குறிப்பிட மாட்டோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இங்கிலாந்து வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இச்சமபவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







