அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஆய்வு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அதிமுக அலுவலகம் சேதம்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அதிமுக அலுவலகம் சேதம் அடைந்தது. சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீரமைப்புப் பணிகளை அதிமுகவின் இதர நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகள் மாற்றப்பட்டுள்ளது.

கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, சில கதவுகளின் சாவிகளையும் பன்னீர்செல்வம் ஆட்கள் எடுத்துச்சென்றதால் பூட்டுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. 8 கதவுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

கணினிகளை ஓபிஎஸ் எடுத்துச் சென்றதால், அதற்கு மாற்றாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மாற்றப்பட்டன.

ஓரிரு நாட்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்களுடன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

https://twitter.com/news7tamil/status/1574268181148880896

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.