முக்கியச் செய்திகள் இந்தியா

பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு&காஷ்மீரில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ளனர். நேற்று பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய குமார் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் திட்டத்தில், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது இந்த எண்கவுன்டர் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முன்னதாக நேற்று அதிரடி தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், ஏடிஜி ஜம்மு முகேஷ் சிங், ஐபி தலைவர் அரவிந்த்குமார், டிஜி சிஆர்பிஎஃப் குல்தீப் சிங் மற்றும் டிஜி சிஐஎஸ்எஃப் சுதீர் குமார் ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு

Gayathri Venkatesan

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு: கி.வீரமணி கோரிக்கை!

Ezhilarasan

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

Halley karthi