இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில் ஸ்காட்லாந்து சென்று இருந்த அவர், பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்தார். இன்று மாலை அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். அவருக்கு வயது 96. ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர். 70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணி யாக பதவி வகித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து ராணியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக விரைவில் முடி சூட்டிக் கொள்வார். இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இருக்கும் சார்லஸ் முன்னிலையில் தான் இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.