முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

இங்கிலாந்து ராணி மறைவு-தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “2015 மற்றும் 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றிருந்தபோது ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தேன். அது என்னால் மறக்க முடியாத சந்திப்பாகும். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி அவரது திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த நினைவுகள் எப்போதும் எனது மனதில் நீங்காமல் இருக்கும்” என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். மிக நீண்ட இங்கிலாந்து ராணியாக இருந்தவர். 70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத், 15 பிரதமர்களையும், நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளையும் சந்தித்தவர். அவருடைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. பொது வாழ்க்கையில் நேர்மை, கண்ணியம், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அரச குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து மக்களுக்கும், ராணியின் மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி. வெளியிட்ட இரங்கல் செய்தியில், “கடந்த நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கண்ணியமான தலைவர்களில் ஒருவரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு பற்றி அறிந்து வருத்தமடைந்தேன். அரச குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே நேரத்தில் 12 படங்கள்: இந்தியில் அதிகரிக்கும் தமிழ்ப் படங்களின் ரீமேக்

Gayathri Venkatesan

காவல்துறையின் 7 புதிய கட்டடங்கள் – காணொலி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

பிரஃபுல் படேலை நீக்க கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!