என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு.. நடந்தது எப்படி..!

சென்னை தாம்பரம் அருகே போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடிகள் ரமேஷ், சோட்டா வினோத் ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை – புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன்…

சென்னை தாம்பரம் அருகே போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடிகள் ரமேஷ், சோட்டா வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை – புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது.

அதிர்ச்சியடைந்த போலீசார் கார் அருகில் சென்ற போது அதில் இருந்து அடையாளம் தெரியாத 4 பேர் ஆயுதங்களுடன் காரில் இறங்கி வந்து போலீசாரை நோக்கி தாக்க முயன்றனர். அப்போது உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு வெட்டு விழுந்தது. மீண்டும் அவரை தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது.

இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும், உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினர். துப்பாக்கியால் சுடப்பட்ட 2 பேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 பேரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். விசாரணையில், என்கவுண்டர் கொல்லப்பட்டது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரிந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.