முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் வேலைவாய்ப்பு

வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐசிஎம்ஆர் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வைராலஜி நிறுவனத்தில் Project Assistant (Research Assistant) – 01, Project Assistant (Technical Assistant) – 01 ஆகிய பணிகள் காலியாக உள்ளன. மாதம்தோறும் ரூ. 31,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் வயது 30க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Project Technical-III (Lab Technician) – 01 காலிப் பணியிடத்துக்கு சம்பளம் மாதம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, ரோடியோலஜி, ரோடியோகிராபி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Project Multitasking Staff பணிக்கு 02 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.15,800 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் http://forms.gle/HadnoeHKRTKMPWr7 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் நகல்களை இணைத்து The Director, ICMR-NIV, Pune என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை http://www.niv.co.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு; முதலமைச்சர் அதிரடி

G SaravanaKumar

‘அக்னிபாத்’ அறப்போராட்டத்திற்கு முழு ஆதரவு – சீமான்

Halley Karthik

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!