இமானுவேல் சேகரனார் நினைவு தினம் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

தியாகி இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்,

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தியாகி இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை. தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.